Categories
தேசிய செய்திகள்

இனி பாஸ்போட் பெற அலைய வேணாம்…. போஸ்ட் ஆபிஸிலேயே ஈஸியா…. எப்படி விண்ணப்பிப்பது…???

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் என்பது கட்டாயமாகும். இவ்வாறு பாஸ்போர்ட் வாங்குவதற்கு பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு சென்று மணிக்கணக்கில் காத்து கிடந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சிரமம் இருந்து வந்தது. மேலும் பாஸ்போர்ட் கையில் கிடைக்கவும் நீண்டகாலம் எடுக்கும். இந்நிலையில் பாஸ்போர்ட் எளிதாக கிடைக்கும் வகையில் அரசு தரப்பில் புதிய  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உங்களுடைய அருகில் உள்ள தபால் நிலையங்களில் சென்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

தபால் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதனை இந்திய தபால்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது போஸ்ட் ஆபீஸ் வெப்சைட் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது ஆன்லைன் மூலமாகவே கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

உங்களின் விண்ணப்ப கோரிக்கை ஏற்கப்பட்ட உடன் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு பிறப்புச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். எல்லா ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு விண்ணப்பதாரரின் கைரேகை மற்றும் கண்ரேகை  எடுக்கப்படும். இந்த வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு 15 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு பாஸ்போர்ட் வந்து சேரும்.

Categories

Tech |