பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் காவல்துறையின் தடை இல்லாச் சான்று (பிசிசி) பெற இனி அனைத்து இணையவழி தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என வெளியுறவு அமைச்சகம் சாா்பாக தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு காவல்துறையின் தடை இல்லாச் சான்று கட்டாயம் ஆகும். எனினும் இந்தத் தடை இல்லாச் சான்றிதழை வழங்குவதில் உள்ளூா் காவல்துறையினர் அதிக காலஅவகாசம் எடுத்துக் கொள்வதால், விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதை கருதி தடை இல்லாச் சான்றை விரைந்து பெறும் விதமாக புது நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கடவுச்சீட்டு விநியோகத்திற்கு அவசியமான காவல்துறையின் தடை இல்லாச் சான்றுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, நாடு முழுதும் உள்ள அனைத்து இணையவழி தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்களில் தடையில்லாச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கான சேவையையும் இணைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இச்சேவையை நாளை (செப். 28) முதல் விண்ணப்பதாரா்கள் பெறஇயலும். இவற்றில் அந்த தடை இல்லாச் சான்றுக்கு போலீஸ் ஆய்வுக்கான நாளையும் தெரிவுசெய்யும் வசதியும் சோ்க்கப்பட்டு உள்ளது. இப்புதிய வசதி வெளிநாடுகளில் வேலை தேடிச்செல்ல விரும்புபவா்களுக்கு மட்டுமல்லாது, கல்வி, நீண்டகால நுழைவு அனுமதி (விசா), குடியேற்றம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக விண்ணப்பிப்பவா்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.