Categories
Tech

இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்…. பயனர்களுக்கு திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் நெட் பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜி5,டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் என பல முன்னணி நிறுவனங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் மற்றும் கட்டணங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் தனது பார்வையாளர்களுக்கு அப்போது பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்வதை தடுக்க netflix நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளது. அதாவது பயனர்கள் இனி netflix கணக்கின் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பாஸ்வேர்டு பகிரும் நபரிடம் 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் எவ்வளவு கட்டணம் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

Categories

Tech |