டாடாசன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை அருகில் நடந்த கார் விபத்தில் இறந்தார். அத்துடன் இவர் பயணித்த காரில் முன்னிருக்கையில் சீட்பெல்ட் அணிந்து பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பக்க இருக்கையில் அமர்ந்து சென்ற சைரஸ் மிஸ்ட்ரி சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது “காரின் பின் சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என்றும் மீறினால் அபராதம் விதிக்கும் சட்டம் விரைவில் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். அதாவது குறைந்தது 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அபராதம் விதிப்பது நமது நோக்கம் அல்ல. விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.