பெண் பயணிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக பேருந்து, விமான பயணங்களை விட ரயில் பயணங்களை நிறைய பேர் விரும்புவார்கள். டிக்கெட் கட்டணம் குறைவு, பாதுகாப்பு வசதிகள், சௌகரியமான பயணம் என ரயில் பயணத்தை விரும்புபவர்கள் ஏராளம். ரயில் பயணம் செய்பவர்கள் ஐஆர்சிடிசி ஆப் மூலமாக, ஆன்லைன் மூலமாக அதிகமாக டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு பல இடங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ரயில்களிலும் சிறப்பு சலுகை உள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இனி பெண் பயணிகள் யாரும் ரயிலில் சீட் கிடைக்குமா என்று பயப்படத் தேவையில்லை. பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு தனி இருக்கை இருப்பது போல ரயில்களிலும் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கான சிறப்பு பெர்த்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு பெண்களின் பாதுகாப்புக்கு மற்றொரு திட்டமும் தயாராகி வருகின்றது. நீண்ட தூர ரயில்களில் பெண்கள் வசதியாக பயணிக்க இந்திய ரயில்வே துறை ரிசர்வ் பெர்த் உள்ளிட்ட பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
தொலைதூர விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பில் 6 பெர்த் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் முழு ஏசி எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூன்றாவது ஏசி பெட்டியில் பெண் பயணிகளுக்காக 6 பெர்த் தனியாக ஒதுக்கப்படுகின்றது. 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறப்பு பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயிலில் உள்ள பெட்டிகளுக்கு ஏற்ப பெண்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் முன்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.