மத்திய அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டை அனைத்து அரசு, வங்கி போன்ற சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தனி மனித அடையாளம் துவங்கி அனைத்து தகவல்களும் ஆதார் மூலம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பிறந்த குழந்தைக்கும் கூட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழுடன் பெற்றோர்களின் ஆதார் உள்ளிட்ட சில தகவல்கள் தேவை.
அதே போல 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்க குழந்தையின் கைரேகை உட்பட்ட பயோமெட்ரிக் தகவல்கள் கேட்கப்படும். மேலும் பிறந்த குழந்தையின் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் குழந்தைக்கு 5 வயதாகும்போது 5 விரல் கைரேகையுடன் கூடிய பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த சேவைகளை மேற்கொள்ள அருகிலுள்ள ஆதார் மையத்தை அணுகலாம். இந்த சேவைகள் தற்போது ஆன்லைன் வழியில் எளிதாக்கப்பட்டுள்ளது. அதன் படி குழந்தைக்கு ஆதார் அட்டை எடுக்க,
- UIDAI யின் uidai.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
- அதில் Aadhaar Card Registration என்பதை கிளிக் செய்யவும்.
- அங்கு குழந்தையின் பெயர், பெற்றோர்களின் மொபைல் எண், மெயில் ஐடி போன்ற தகவல்களை பதிவு செய்யவும்.
- இதற்கு பிறகு முகவரி, மாவட்டம், மாநிலம் போன்ற தகவல்களை கொடுக்கவும்.
- பிறகு Fix Appoint tab என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் ஆதார் அட்டைக்கான பதிவு தேதியை தேர்வு செய்யவும்.
- பிறகு அருகிலுள்ள ஆதார் மையத்தை தேர்வு செய்து பிற சேவைகளை தொடரவும்.