விற்பனை செய்யப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்று அனைத்து நிறுவனங்களும் அந்தந்த பொருட்களில் பதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நம் நாடானது, தினம்தோறும் 25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து, 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீதி உள்ளவை நிலத்தில் சேர்க்கப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு விடுவதால், அது காற்றில் மாசடைந்து தண்ணீரில் கலக்கப்பட்டு கடலில் சேர்கின்றது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்க்காக, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை, சாலைகள் அமைக்க பயன்படுத்த வேண்டும் என, 2016ம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரி, அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, முதல் முதலாக, 2018ம் ஆண்டு, ஹரியானாவில் உள்ள குருகிராம் மாநகராட்சி, சாலைகள் அமைப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி உபயோகப்படுத்தியுள்ளது. இதே போல், ஜம்மு – காஷ்மீரில், 270கி.மீ., தூரமுள்ள சாலை அமைக்க, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தியுள்ளனர். இதுவரை, பிளாஸ்டிக் கழிவுகளை மட்டுமே பயன்படுத்தி, நம் நாட்டில் 11 மாநிலங்களில், ஒரு லட்சம் கி.மீ., வரை சாலைகள் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள நிதியாண்டில், இது இரு மடங்காக உயரும் என தெரியவந்துள்ளது. இந்த முயற்சியில் ஒரு கி.மீ., சாலை அமைப்பதற்கு, 9 டன், “தார்” மற்றும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சாலை அமைக்கும் பொழுதெல்லாம் ஒரு டன் தாரின் கொள்முதல் விலை முப்பதாயிரம் ரூபாய் சேமிக்கப்பட்டு வருகிறது.