நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக கொரோனா பணிக்குழு அறிவித்துள்ளது. மிதமான மற்றும் தீவிரமான கொரோனா தொற்று ஆளானவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இதில் போதிய பலன் கிடைக்கவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.