Categories
மாநில செய்திகள்

“இனி புகார்கள் வரக்கூடாது”….தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…. போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி…!!!!!!!

போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 3,200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக நாள்தோறும் 28 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கபடுவதால் மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து வருகின்றது. மேலும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு மாநகர பஸ் உதவியாக இருந்து வருகின்றது. அதேசமயம் இலவச பயணம் என்ற காரணத்தினால் பெண்களை அவமதிக்க கூடாது. அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டுமென டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு  ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று பெண்கள் சைகை மூலமாக பஸ்சை நிறுத்த முயற்சி செய்தால் உடனடியாக நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஒருசில பேருந்து டிரைவர்கள் பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்று தூரம் தள்ளி நிறுத்துவதாகவும் இதனால் பெண்கள், வயதானவர்கள் ஓடிச்சென்று எறுவதில்  சிரமம் ஏற்படுவதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாமிற்கு புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் அனைத்து பேருந்து டிப்போ கிளை மேலாளர்களுக்கு  சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பி வைத்துள்ளார்.  சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ட்ரைவர்கள் கண்டக்டர்கள் பஸ்களை உரிய நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி  இறக்க வேண்டும். மேலும் நிறுத்தத்தை விட்டு சற்று தூரம்  தள்ளி சென்று நிறுத்தக்கூடாது பொது மக்களிடமிருந்து புகார்கள் வராத விதமாக செயல்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை கிளை மேலாளர்கள் எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |