Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி புது செல்போன் வாங்குனா… இது கிடையாது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இனிமேல் செல்போன் வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர் வழங்கப்படாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உலகில் உள்ள மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத பொருள் ஆகிவிட்டது. அதனை அனைவரும் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். நாம் அனைவரும் செல்ஃபோன் வாங்கும்போது அதனுடன் சேர்த்து சார்ஜர் வாங்குவது வழக்கம். ஆனால் இனிமேல் புதிய செல்போன் வாங்கினால் சார்ஜர் தரப்படாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள எம். ஐ 11 செல்போனுடன் சார்ஜர் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.

இது சுற்றுச்சூழலை காப்பாற்றும் முயற்சி. முதலில் வாடிக்கையாளர் இதை விரும்பாவிட்டாலும் போகப் போக உணர்வர் என கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இனி அனைத்து நிறுவனங்களும் புதிய போன்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி விடுமோ என வாடிக்கையாளர்கள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |