இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் சென்னையில் பிங்க் நிற பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் உள்ளது. ஆனால் சில பெண்கள் அவசரத்தில் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இதனால் ஏற்படும் குழப்பத்தை போக்குவதற்கு பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பஸ்ஸின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து துறை மேற்கொண்டது.
இந்நிலையில் பிங்க் நிற பஸ்கள் இயக்கத்தை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும் அவர் ஓமந்தூர் அரசு பன்னோக்கு மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,