பென்ஷன் வாங்கும் அனைத்து மூத்த குடிமக்களும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது. கட்டாயமாக இணைக்காவிட்டால் பென்ஷன் பணம் கிடைக்காது. கொரோனாவை கருத்தில் கொண்டு ஆயுள் சான்றுகளைச் சமர்ப்பிப்பதற்க்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் இன்னும் நிறைய பேர் சமர்ப்பிக்க முடியாமல் போனது. இதனால் மூத்த குடிமக்களுக்கான பென்சன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தன்னுடைய உறுப்பினர்களுக்கு சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய ஆயுள் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பென்சன்தாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.