Categories
தேசிய செய்திகள்

இனி பென்ஷன் கட்டணம் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கட்டணங்கள் குறித்து தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தான் தேசிய பென்ஷன் திட்டம். அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தத் திட்டம் ரிட்டயர்மென்ட் பலன்கள் மற்றும் அதன் பிறகு பென்சன் பாதுகாப்பு தருகின்றது. வங்கிகள் மற்றும் தபால் துறை மூலமாக தேசிய பென்சன் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த நிலையில் தேசிய பென்சன் திட்டத்தில் தபால் துறை மூலமாக ஆன்லைனில் முதலீடு செய்வதற்கான கட்டணங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது

புதிய கட்டணங்கள்:
* புதிய சந்தாதாரர் பதிவு – 200 ரூபாய்
* ஆரம்ப பங்களிப்பு – 30 ரூபாய்
* அடுத்தடுத்த பங்களிப்புகள் – 30 ரூபாய்
* நிதி சாரா பரிவர்த்தனைகள் – 30 ரூபாய்
* ஆண்டுக்கு 1000 ரூபாய் முதல் 2999 ரூபாய் வரை பங்களிப்பு செலுத்துவோருக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
* ஆண்டுக்கு 3000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை பங்களிப்பு செலுத்துவோருக்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
* ஆண்டுக்கு 6000 ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செலுத்துவோருக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
* கணக்கை மூட அல்லது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க 125 ரூபாய் கட்டணம்.

Categories

Tech |