இந்தியாவில் ஆன்லைன் இரு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு என்பது இரு சக்கர வாகன உரிமையாளருக்கும் இரு சக்கர வாகன காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான சட்ட ஒப்பந்தம், இது ஒரு பேரழிவு அல்லது இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு உத்தரவாதம் அளிக்கிறது. இரு சக்கர காப்பீட்டுக்கான காப்பீட்டு செலவு உங்கள் பைக்கின் ஐடிவி – இல் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆன்லைன் இரு சக்கர வாகன காப்பீட்டுக் கொள்கையின் நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டும். பைக் காப்பீட்டு ஆன்லைன் பாலிசியை கூடுதல் கவர் (ஆட்-ஆன் கவர்) மூலம் வாங்கலாம். பைக் இன்சூரன்ஸ் செய்ய நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தவாறே அந்த வேலையை மொபைல் மூலமாக செய்து முடிக்கலாம்.
அதற்கு முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் .
அதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும்.
அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற இடத்தில் Individual என்றும், New or Renewal Policy என்ற இடத்தில் New Vehicle Polocy என்றும் கொடுக்க வேண்டும்.
பின்னர் Vehicle Details பகுதியில் உள்ள அனைத்து கட்டங்களையும் நிரப்பிய பின், Value Details பகுதியில் நீங்கள் எந்த Policy வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து Quick Online Policy-ஐ கிளிக் செய்யவேண்டும்.
Page Vehicel Details பகுதியில் உள்ள விபரங்களை நிரப்பிய பிறகு Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் திறக்கப்படும் பக்கத்தில் உங்களுடைய விபரங்கை நிரப்பிய பிறகு View-ஐ கிளிக் செய்து OK கொடுக்கவேண்டும்.
பிறகு உங்களுக்கான Transaction Id கிடைக்கும். அதில் Confrom Proposal & Proceed for Payment-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
இன்சூரன்ஸிற்கான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இப்போது உங்களுக்கான பைக் இன்சூரன்ஸ் கிடைத்துவிடும்.