திருவாரூர் மாவட்டத்தில் இனி பொது இடங்களில் மது அருந்த கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துகின்றனர். அதனால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.
எனவே இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் மது அருந்துவதை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார். அதன்படி கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் அளிக்கலாம்.
திருவாரூர் 9498110861
நன்னிலம் 9498143926
மன்னார்குடி 9498183264
திருத்துறைப்பூண்டி 9445407674
முத்துப்பேட்டை 9840717894
தனிப்பிரிவு அலுவலகம் 04366 225925, 9498100865
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
1)திருவாரூர்: 830058812
2)நன்னிலம்: 9498175387
3)திருத்துறைப்பூண்டி: 9498162363
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 9498181220
ஹலோ போலீஸ் 8300087700