கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி பயின்று கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.
இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் பிராந்திய மொழிகளில் பாடங்களை பயிற்றுவிக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதன்படி போரியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்கவும், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் பாடங்கள் கற்பிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. இது பொறியியல் மாணவர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.