Categories
மாநில செய்திகள்

இனி போதை நபருடன் வாகனத்தில் செல்பவர் மீதும்…. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

நம் நாட்டிலேயே அதிகமான சாலைவிபத்து மரணங்கள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 1026 நபர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் நடைமுறைபடுத்தி வருகின்றனர். அத்துடன் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவதாலேயே அதிக விபத்துகள் நிகழ்வதால் அதனை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில் இன்றுமுதல் சென்னையில் புது போக்குவரத்து விதி நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி வழக்கமாக குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபரிடம் மட்டுமே போக்குவரத்து காவல்துறையினர் அபராத தொகை பெற்று வந்தனர். ஆனால் இப்போது வாகன ஓட்டுநர் குடி போதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடி போதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இதன் வாயிலாக இருவரிடமும் அபராதம் வசூல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதேபோல் கார் போன்ற 4 சக்கர வாகனத்தில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தெரிந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனருடன் பயணம் மேற்கொள்ளும்போது அந்த ஓட்டுனர் குடி போதையில் இருந்தால் பின் அமர்ந்து இருப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும். எனினும் சவாரி செல்லும்போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |