தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை இந்திய தேசத்தின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றாகும். சென்னை மாநகராட்சியை சுற்றி பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற தொழில் நகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான மகாபலிபுரமும் அமைந்துள்ளது. சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிப்பது மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது.
அதனால் தூய்மையை பராமரிக்க பல நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சென்னை மாநகராட்சி பெயர் பலவையில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டும் நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் கடந்த மாதத்தில் மட்டும் போஸ்டர் ஒட்டியதாக 1.37 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.