Categories
மாநில செய்திகள்

இனி மது, புகைபிடித்தால் உள்ளே வரகூடாது…. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட அரசு போக்குவரத்து கழகம்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் பணிமனையில் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது கண்டிப்பாக ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த ஒரு ஊழியரும் பேருந்து இயக்கக் கூடாது.

பணிமனைக்குள் இருக்கும் ஓட்டுநர், நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணத்தைக் கொண்டு புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிமனைக்குள் எந்த ஒரு பணியாளரும் வரக்கூடாது. பாதுகாவலர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மது அருந்திய ஊழியர்களை பணிமனைக்குள் அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் குறிப்பிடப்பட்டுள்ளது

Categories

Tech |