Categories
மாநில செய்திகள்

“இனி மரம் வளர்த்தா தங்க நாணயம் பரிசு”…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி நடப்பாண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைஞர் பிறந்த நாள் விழாவின் தொடர்ச்சியாக சென்னை அண்ணாநகரில் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பாக 9,999 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் மரக்கன்று நடும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதனால் கலைஞர் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட்டு, அதனை நன்றாக பராமரித்து வருபவர்களுக்கு குழுவை வைத்து தேர்வு செய்து அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் இனி பரிசு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |