கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவமனைகள் கிளினிக்குகளுக்கு பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில அம்சங்கள் கட்டாயமாக படுகிறது. அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வசதி இருப்பது அவசியம். அதேபோல் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தளம், பிரத்தியேக மின்தூக்கி வசதிகள் அமைப்பது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்படமாட்டாது என மருத்துவ சேவைகள் இயக்கம் கூறியுள்ளது.
தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் உள்ளது. இவை அனைத்திற்கும் பதிவு உரிமம் பெறுவது மிக அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 30 ஆயிரம் மருத்துவமனைகள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க பட்டதாகவும் அதில் 5000 த்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமங்கள் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கொரோனா தொற்று காலகட்டத்தில் சிறிய அளவிலான மருத்துவமனைகளில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளிளும் குறைபாடு உள்ளது. இதையடுத்து மருத்துவமனைகள் கிளினிக்குகளுக்கு பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில அம்சங்கள் கட்டாயமாக படுகிறது. அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வசதி இருப்பது அவசியம். அதேபோல் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தளம், பிரத்தியேக மின்தூக்கி வசதிகள் அமைப்பது கட்டாயம். ஒருவேளை அதற்கான இடவசதி இல்லை என்றால் தனி மின் இணைப்புடன் கூடிய மின்தூக்கி வசதிகள் செய்து இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.