நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதிகமாக மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடுகள் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. அதில் வருவாய் கிடைப்பதோடு, விவசாயத்திற்கும் மாடுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமைகள் வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் கட்டாயமாக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கால்நடைகள் வழிதவறி வருவதை கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories