அசாம் மாநிலத்தில் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அசாம் சட்டசபையில் நேற்று கால்நடை பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, மாட்டிறைச்சி எல்லைகளை தாண்டி கொண்டு செல்வதும், கோயில்களுக்கு அருகே 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மாட்டிறைச்சி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
Categories