Categories
தேசிய செய்திகள்

இனி மாணவர்களுக்கு பணத்திற்கு பதில் இதுவாம்…. மாநில அரசு புதிய திட்டம்….!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பின் நடப்பு ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களாக பள்ளிகள் நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் மத்திய அரசு ஒரு சில கட்டுப்பாட்டுகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்க்கார  அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இரண்டு வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து காணப்படுகின்றது.

இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக பாடங்கள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இந்த சூழலில் பள்ளி மாணவர்களுக்கு பணத்திற்கு பதிலாக இலவச சீருடை வழங்கப்பட இருப்பதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பல நலத்திட்டங்களை அறிவித்திருக்கின்றார். அதாவது புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு புத்தகங்கள் அச்சிட அரசு அச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

கடந்த முறை பள்ளி மாணவர்களுக்கு சீருடைக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை சீருடை வழங்கப்படும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சுதானா நகரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார்கள் ஜெனரேட்டர்  மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பணிகளை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் ரூபாய் 13 கோடியே 25 லட்சத்துக்கு மதிப்பீடு செய்யப்பட்டு முடியும் நிலையில் இருப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசாங்கத்திற்கு சொந்தமான காலியிடம் கண்டறியப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அங்கு நூலகம் கட்டிடம் அமைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

Categories

Tech |