தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் கட்டாயமான ஆவணம். மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆதார் விவரங்கள் கட்டாயம் ஆட்சியர் சங்கர் லால் குமாவத் அறிவித்துள்ளார். சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆதார் விவரங்களை பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆதார் விவரங்களை பதிவு செய்த மாணவ மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஆதார் விவரங்களை வழங்காத மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்பும் மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலமாக டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதனைப்போலவே புதுப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரர்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி இறுதி நாளாக கருதப்படுகிறது.