Categories
மாநில செய்திகள்

“இனி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கைது தான்”….. சென்னை கமிஷனர் கடும் எச்சரிக்கை….!!

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடி விரிவாக்கப்பட்ட புதிய சுயசேவை பிரிவை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பிறகு பேசிய டிஜிபி சைலேந்திரபாபு , இந்த பல்பொருள் அங்காடி ரூ.56 லட்சம் செலவில் திறக்கப்பட்டது. ஆயுதப் படையின் முக்கிய பொறுப்பில் நான் இருந்தேன். என் தந்தை ராணுவத்தில் இருந்தபோது மதுவை வாங்கி விற்பனை செய்து என்னை படிக்க வைத்தார். காவல்துறை பணி என்பது மிகவும் கடுமையான பணி ஆகும். காவல் குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்ற பல்பொருள் அங்காடிகளை திறந்துள்ளனர். அதனை தொடர்ந்து காவலருக்கு பெரிய பிரச்சினையை ஓய்வு ஒன்றுதான். அதற்கு முதல்வர் சட்டமன்றத்தில் காவல்துறையினருக்கு ஒரு நாள் விடுமுறை என்று அறிவித்தார்.

மேலும் ஆண்டுக்கு 250 காவலர்கள் மரணமடைகின்றனர். இதில் 50 காவலர்கள் சாலை விபத்தில், 50 காவலர்கள் தற்கொலை செய்து, மற்றவர்கள் ரம்மி போன்ற சூதாட்டத்தை விளையாடி தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளில் மோசடிகள் நடைபெறுகிறது என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளில் நடைபெறும் மோசடிகளை விசாரிக்கும் பொறுப்பிலுள்ள காவலர்கள் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது. காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் நிதி ஒதுக்குவதாக கூறினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கல்லூரி மாணவர்களின் பிரச்சனை தற்போது பெரிதாக உள்ளது. மாணவர்கள் இடையான மோதல்கள் நேற்று மட்டும் மூன்று சம்பவங்கள் நடைபெற்றது. நேற்று நடந்த சம்பவத்தில் 10 மாணவர்கள் மீது மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பள்ளி கல்லூரிகளில் உயர்கல்வித் துறை மூலம் பள்ளி திறந்தவுடன் முதல் ஒரு வாரத்துக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |