Categories
மாநில செய்திகள்

இனி மாலையில் உழவர் சந்தைகள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

● மாலை நேரங்களிலும் உழவர்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானியங்களும் விற்க  அனுமதிக்கப்படும்.
● தமிழகத்தில் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் மேலாண்மைக்கு  ரூபாய் 5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு.
● பம்பு செட்டுகளை தொலைவிலிருந்தே கைபேசி மூலம் இயக்க உதவிடும் தானியங்கி கருவிகளுக்கு ரூபாய் 5000 கோடி வரை மானியம் வழங்கப்படும்.
● இரவு நேரத்தில் பம்பு செட்டுகளை இயக்க செல்லும் விவசாயிகள் பாம்பு கடியிலிருந்து தப்பிக்க இத்திட்டம் உதவும்.

Categories

Tech |