Categories
ஆட்டோ மொபைல்

இனி மின்சார வாகன விற்பனை உயர போகுது…. பிரபல நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் புதிய தொழில்நுட்பம்….!!!

உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட இரண்டு மடங்கு டென்சிட்டியை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.

அதேசமயம் குறைந்த விலையில் இந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யலாம். இது தற்போது பரிசோதனையில் உள்ள நிலையில் இந்த பேட்டரியை முழுமையாக 15 நிமிடத்திற்கு சார்ஜ் செய்துவிடலாம் என்றும் தற்போது உள்ள பேட்டரியை விட எடை குறைவு என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பேட்டரி வழக்கமான பேட்டரிகளை விட மக்கள் நீண்ட நேரம் பயணம் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் மக்களை மேலும் மின்சார வாகனங்களை நோக்கி செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028 ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |