தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைந்ததே மின்தடைக்கு காரணம். தமிழகத்திற்கு வரவேண்டிய 2000 மெகாவாட் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடும் ஒன்று. மின்னகத்திற்கு வரும் புகார்களில் 99% சரி செய்யப்படுகிறது.
மின் தேவையை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பது தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது,. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூடுதல் மின்சாரம் வாங்கவும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஓரிரு நாளில் மின்தடை என்ற பேச்சே இருக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.