Categories
மாநில செய்திகள்

ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை நகல்கள்…. இனி இந்த முறையில்…. வெளியான அரசாணை….!!!

மின்னணு முறை மூலமாக ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை பெறும் வசதியை செயல்படுத்துவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறைப்படி வழங்குவதற்கும் அவற்றை பார்வையிட்டு சரிபார்க்கவும் வழிவகை செய்வதே டிஜிட்டல் லாக்கர் முறை. இதன் மூலம் குடிமக்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது அதற்கு தேவையான ஆதார ஆவணங்களை டிஜிட்டல் லாக்கர் வசதியில் இருந்து எடுத்து இணைத்துக்கொள்ளலாம். அதன்படி, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகல்களை மக்களுக்கு இந்த டிஜிட்டல் லாக்கர் முறை மூலமாக வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.

மேலும் நடப்பில் உள்ள அனைத்து மென்பொருள்களையும் டிஜிட்டல் லாக்கர் முறையுடன் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |