Categories
மாநில செய்திகள்

இனி மின் கட்டணம் செலுத்தாவிட்டால்….. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே பாடங்களை கற்று வருகிறார்கள்.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள், work from Home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், “ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அறிவிப்பை வெளியிட்டார். பராமரிப்பு பணிக்காக நின் வாரியத்தால் தரப்படும் மின்தடை காண அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு மின்தடை இருக்கும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மேலும் முன்னறிவிப்பின்றி மின்நிறுத்தம் இருக்காது. எத்தனை மணிக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பது முன்கூட்டியே அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மின் கட்டணம் செலுத்த அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கட்டணம் செலுத்துவதை மக்கள் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.மேலும் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இனி மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |