Categories
தேசிய செய்திகள்

இனி முகவரிசான்று இல்லாமலேயே…. ஆதாரில் அட்ரஸ் மாற்றலாம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் அட்டையில் சில திருத்தங்கள், புதிய ஆதாருக்கு விண்ணப்பித்தல் போன்றவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆதார் கார்டில் உள்ள விவரங்களை மாற்றும் செயல்முறையை ஆதார் ஆணையம் எளிமைப்படுத்தி வருகிறது. அதன்படி ஆதார் அட்டையில் முகவரி மாற்றுவதற்கு முகவரி சான்று இல்லாமலேயே எளிதாக மாற்ற ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

எனவே முகவரி சான்றுக்கு பதிலாக வெறும் ஒப்புதல் கடிதத்தை மட்டுமே வைத்து ஆதார் கார்டில் வீட்டு முகவரியை மாற்றிக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர், உறவினர், நண்பர்கள், வீட்டு உரிமையாளர்களிடம் இந்த ஒப்புதல் கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் யாரிடம் இருந்து இந்த ஒப்புதல் கடிதத்தை பெறுகிறோமோ அவருடைய செல்போன் எண், ஆதார் கார்டு எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ஒப்புதல் கடிதத்தை கொடுக்காவிட்டால் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |