டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் மசோதா எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.