நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி ஊரடங்கு, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தற்போது கொரோனா தாக்கம் சீரடைந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முற்றிலும் குறைந்து உள்ளது. இதன் காரணமாக கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ளலாம். ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிட்டாலும், கொரோனா பாதிப்பு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.