Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி மேல் பாஜக தான்…! ஒன்னும் செய்ய முடியாது…! இது காலத்தின் கட்டாயம்… அதிமுக அமைச்சர் பேச்சு …!!

மத்தியில் ஆளும் பாஜக வை இன்னும் 10 ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாது என அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்உள்ள பாஷிரா பாத் பகுதியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு 568 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

இஸ்லாமிய பெண்கள் நிறைந்திருந்த அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், மத்தியில் உள்ள பாஜகவை இன்னும் 10 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்றார். காலத்தின் கட்டாயத்தால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி உள்ளதாகவும் கூறினார்.

மேலும், பிஜேபி தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது தொல்லை செய்தார்களா? நீங்களே சொல்லுங்கள். நம்முடைய தமிழகத்தில் ஏதாவது ஒரு இஸ்லாமியர் பிஜேபியால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கின்றதா ? எப்பவுமே இல்லை என்று தெரிவித்தார்

Categories

Tech |