இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனும் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பு IMEI என்ற தனித்துவமான எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு போர்ட்டலில் (https://icdr.ceir.gov.in) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் திருட்டுகளையும்,திருடப்பட்ட ஸ்மார்ட் போன்கள் தவறாக பயன்படுத்தப்படுவதையும் எளிதில் கண்டுபிடிக்க முடியும். IMEI என்பது தனித்துவமானது. மேலும் இது குற்றவாளிகளை கண்காணிக்கப் பயன்படுகிறது. உங்களின் ஃபோனில் இந்த IMEI என்ற எண்ணை பெறுவதற்கு *#06#என்று டயல் செய்ய வேண்டும்.