கூகுள் தளத்தில் இனி போலியான மற்றும் நம்பகத்தன்மை இல்லாத செய்திகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. “Helpful content”என்ற பெயரில் இந்த புதிய அப்டேட்டை வரும் 22ஆம் தேதி முதல் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் உண்மைக்கு மாறான செய்திகளை கூகுள் தனது பயனர்களுக்கு காட்டாமல் வடிகட்டி விடும்.
குறிப்பாக ஆன்லைன் கல்வி,ஷாப்பிங் மட்டும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் வந்தால் தடுக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.இதன்படி ஏதாவது ஒரு சம்பவம், பொருள், முக்கிய மனிதர், உள்ளிட்டவைப் பற்றி தரம் குறைந்த, தகவல்கள் குறைவாக, அல்லது உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்தால் அந்த செய்திகளை கூகுள் பயனாளிகளுக்கு காண்பிக்காது.
Next week, we will launch the “helpful content update” to better ensure people see more original, helpful content written by people, for people, rather than content made primarily for search engine traffic. Learn more & advice creators should consider: https://t.co/fgf2TPNIqD pic.twitter.com/xOuX2iVk2d
— Google Search Central (@googlesearchc) August 18, 2022