Categories
Tech

இனி யாரும் ஏமாற்ற முடியாது…. True caller செயலியில் புதிய சேவை அறிமுகம்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவ்வகையில் அரசு அதிகாரி அல்லது வங்கி அதிகாரி போல பொது மக்களிடம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர். அதனால் வங்கி கணக்கில் இருக்கும் தொகை முழுவதும் அப்படியே திருடப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைகேடுகளை தடுக்கும் விதமாக truecaller செயலியில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி truecaller செயலியில் டிஜிட்டல் அரசாங்க டைரக்ட்ரி ஒன்றைஇணைத்துள்ளதாகவும் அதன் மூலமாக என்னை சுலபமாக கண்டறிந்து விடலாம் எனவும் இந்த செயலியில் ஹெல்ப்லைன்கள், சட்ட அமலாக்க முகவர், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என அனைத்து முக்கியத்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் போனுக்கு வரும் அழைப்பில் நீங்கள் உண்மையான அதிகாரியை கண்டறிய அரசாங்கத் தொடர்புகளின் படத்தில் நீல நிற டிக் உடன் பச்சை பின்னணியை கொண்டிருக்கும். இதனைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான தொடர்பு எண்களையும் இணைப்பதற்கு ட்ரூகாலர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக அரசு அதிகாரியாக போலியாக பேசுபவர்களை எளிதில் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |