Categories
மாநில செய்திகள்

இனி யாரும் தப்பிக்க முடியாது…. தமிழக முழுவதும் ஸ்கெட்ச் போட்ட போலீஸ்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குற்ற தலைப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள் கூலிப்படையினர் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நோக்கில் பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் கோடி சருகு ஒரே சமயத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3000 மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர்.ரவுடிகளுக்கு தஞ்சம் அளிக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் போலீசார் தகவல் திரட்டி வருகிறார்கள்.மேலும் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளிலும் வசிக்கும் ரவுடிகள்,கூலிப்படையினர் மட்டும் கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களை சேகரித்து போலீசார் அப்டேட்டில் இருக்க வேண்டும் எனவும் நபர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிப்பது மற்றும் தினமும் பின்பற்றும் பணிகளில் ஒன்றாக பின்பற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |