காலை உணவு திட்டத்தை கண்காணிப்பதற்காக புதிய செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் இனிவரும் ஆண்டுகளில் திட்டத்தை விரிவு படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சி.எம். 13 எப். எஸ். என்ற செயலியை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் அறிமுகப்படுத்தி வைத்தார்.
மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது. இந்த திட்டத்தின் மூலம் காலையில் சமையல் செய்ய தொடங்கும் நேரம், அவற்றை முடிக்கும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளிகளில் விநியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் போன்றவை இந்த செயலை மூலம் உடனுக்குடன் கண்காணிக்கப்படும். இதனையடுத்து சரியான நேரத்தில் உணவு பள்ளிகளுக்கு செல்கிறதா என்பதை இதன் மூலம் கண்காணிக்கிறார்கள். சரியான நேரம், தாமதம், விடுமுறை போன்ற விவரங்கள் இந்த செயலை மூலம் பெறப்படுகிறது. எனவே தாமதமாக செயல்பட்ட அதற்கான தகுந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.