இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், கல்வி நிலையங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.