தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மிக குறைந்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 131 கோடி ரூபாய் மதிப்பிலான 123 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். அதன் பிறகு 189 கோடி ரூபாய் மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அங்கு பாதிப்பு அதிகமாக தான் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், தினம்தோறும் 70,000 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.