மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசும்போது ஹலோ எனக் கூறுவதற்கு பதில் வந்தே மாதரம் என கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் என கூறி தான் வணக்கம் செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது ஹலோ என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் பாசம் வளராது வந்தே மாதரம் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த மாநில கலாச்சார துறை அமைச்சரான சுதீர் முக்கந்திவார் அரசு ஊழியர்களுக்கு வாய் வழியாக உத்தரவு பிறப்பித்தார். தற்போது இந்த உத்தரவு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.