Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் அந்த பிரச்சனை இருக்கவே இருக்காது….. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அதிலும் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயிலில் தான் பயணம் செய்கிறார்கள். மற்ற போக்குவரத்துகளை ஒப்பிடுகையில் ரயிலில் டிக்கெட் கட்டணமும் குறைவு தான் அதே சமயம் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பெரும்பாலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது இரவு நேரங்களில் தூங்கும் போது சக பயணிகள் கொடுக்கும் தொந்தரவு அதிகமாக இருக்கும். அதே சமயம் பயணிகளுக்கு தொந்தரவு ஆகும் என்று பார்க்காமல் சத்தமாக போனில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதிலும் சிலர் சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் அருகில் இருக்கும் பயணிகளால் நிம்மதியாக தூங்க முடியாது.இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக புதிய விதிமுறைகளை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. அதன்படி சக பயணிகளை இவ்வாறு யாராவது தொந்தரவு செய்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். உடனே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராத விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விதிமுறை விரைவில் நமக்கு வரவுள்ளது.இந்த புதிய அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |