இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன.மற்ற போக்குவரத்தை விட பலரும் ரயில் போக்குவரத்தை தான் விரும்புகிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் சில சிக்கல்களும் ரயில் பயணத்தில் ஏற்படுகிறது.அதன்படி இரவு நேரங்களில் போது மற்ற பயணிகளுக்கு இடையூறை சிலர் ஏற்படுத்துவதாக ரயில்வே அமைச்சகத்திற்கு புகார்கள் எழுந்துள்ளன.
இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தற்போது ரயில் பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.அதன்படி இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசவோ அல்லது பாட்டு கேட்கவோ கூடாது.இரவு நேரங்களில் இரவு விளக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.சக பயணிகளின் தூக்கத்தை கெடுக்கும்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது.
முதியோர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண் பயணிகள் யாராவது தனியாக பயணிக்கும் போது அவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்.மேலும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இரவு வேலைகளில் அமைதியாக பணியாற்ற வேண்டும் எனவும் இதனை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.