ரயிலில் பயணிகளின் வசதிக்காக கடந்த 2019 ஆம் வருடம் வை-பை திட்டத்தை அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தத் திட்டமானது நான்கு வருடங்களில் விரிவுபடுத்தப்பட்டு முக்கிய ரயில்கள் அனைத்திலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வை-பை திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர், வை-பை தொழில்நுட்பம் அலைவரிசை கட்டணங்களின் வடிவத்தில் தொடர்ச்சியாக செலவுகளை ஏற்படுகிறது. மேலும் பயணிகளுக்கு போதிய நெட்வொர்க்கும் கிடைப்பது கிடையாது. மேலும் இந்த இணையதள சேவைகளை வழங்குவதற்கு பொருத்தமான செலவு மற்றும் குறைந்த தொழில்நுட்பம் தற்போது இல்லை என்பதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். இதன் முதல்கட்டமாக ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதி ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளார்.