Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் சேவை ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஆகியவற்றை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in  மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். இது அனைத்து பயணிகளுக்கும் ரயில்வேயின் புத்தாண்டு பரிசாக இருக்கும் என்றார்.

மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் முக்கிய அம்சங்கள், “இந்த இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர் உள்நுழைந்ததும், உணவு முன்பதிவு, தங்கும் அறைகள் மற்றும் விடுதிகள் முன்பதிவு ஆகிய வசதிகளும் ஒருங்கிணைக்கப்படும். பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும்படி இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பயணி ரயில்வே நிலையத்துக்குள் நுழைந்ததும், அவருக்கு தேவையான ஆலோசனைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் வழங்கப்படும். பிளாட்பாரங்களை தேடுதல் போன்றவற்றில் உள்ள சிரமத்தை இது வெகுவாக குறைக்கும். டிக்கெட் முன்பதிவு செய்வதில் நேரத்தை மிச்சப்படுத்தும்.

கட்டணத்தைத் திரும்பப் பெறும் நிலவரங்களையும் இந்த இணையதளம் மற்றும் செயலியில் எளிதில் அறிந்து கொள்ளலாம். இதற்கு முன், இந்த அம்சம் எளிதாக இல்லை. ரயில்களை தேடுதல் மற்றும் தேர்ந்தெடுத்தல் முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. ரயில் முன்பதிவு குறித்து அனைத்து விவரங்களும் ஒரே பக்கத்தில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிக எளிதாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.

ரயிலில் இருக்கைகள் நிலவரத்தை அறிய புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரயில்களில் டிக்கெட் நிலவரத்தை தாமதமின்றி தெரிவிக்கும். அடுத்தடுத்த தேதிகளில் டிக்கெட்டுகளின் நிலவரமும், அதே பக்கத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
பணம் செலுத்தும் போது, பயண விவரங்களும் தெரிவிக்கப்படும். இது பயணம் செய்பவர் தனது பயண விவரத்தை சரிபார்த்துக் கொள்ள உதவும். இந்த இணையதளத்தில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் உள்ளன. இந்த இணையதளம் மற்றும் செயலியில் உள்ள அம்சங்கள் அனைத்தும் மிகச் சிறந்தவை. ஈடு-நிகர் இல்லாத வகையில் இந்த இணையதளம் மற்றும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |