இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையங்களில் ஒரே வழி தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒரே நுழைவுப் பாதை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஒரே நுழைவுப் பாதை அமைக்கப்படவுள்ளது. கடத்தல்களை தடுக்கவும். பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.