Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் நிலையங்களில் எச்சில் துப்ப…. புதிய கையடக்க பைகள் அறிமுகம்…. ரயில்வே நிர்வாகம் அதிரடி….!!!!

ரயில் நிலையங்களில் பயணிகள் எச்சில் துப்புவதற்கு கையடக்க பை  மற்றும் பெட்டி ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் உள்ள மொத்தம் 42 ரயில் நிலையங்களில் கையடக்க பைகள் வழங்கும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகிறது.

இவை ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இந்தப் பைகள் மூன்று வடிவங்களில் கிடைக்கும். மறு பயன்பாடு கொண்ட இந்த பையில் 20 தடவை வரை எச்சில் துப்பலாம். இதனை பயன்படுத்திய பிறகு மண்ணில் தூக்கி வீசினால், அதில் இருக்கும் தானிய விதை முளைத்துச் செடியாக வளரும் என்பது வியக்கத்தக்கது.

Categories

Tech |