Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளிலேயே சிலிண்டர் கிடைக்கும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் நலனை கருதி புதிய செயல் திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் இனி ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர் கேஸ் விற்பனையை தொடங்க தமிழக கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் கூட்டுறவு துறை கைகோர்த்துள்ளது.முதல் கட்டமாக சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர் விற்கப்பட உள்ளது. இது விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |